90 நாட்கள் சிறப்பு மாஸ்டர்மைண்ட் குழு பயிற்சி

வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு புதிய பயிற்சி. வின் – வின் கொள்கையில் ஒரு கூட்டு முயற்சி

மனதின் அளப்பற்கரிய சக்தியை அறிந்து அதனை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் மேன்மை காண, பிரபஞ்ச விதிகளின் துணையுடன் வாழ்வில் நிர்ணயித்த இலக்குகளை அடைய, எவ்விதமான மனச்சோர்வுகளிலிருந்தும் மீண்டு எழ, விண்ணைத் தொட

நமது வாழ்வில் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது. அது என்ன என்பதிலேயெ பலருக்கும் தெளிவில்லை. ஆனால் மாற்றங்கள் தேவைப்படுகிறது என்று உணர்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு 50 பேருடன் இணைவது என்று தீர்மானித்து இருக்கிறேன். அடுத்த 90 நாட்களில் வீழ்ச்சியடைந்த வாழ்வை சீரமைக்கும் முயற்சி, சீரான பழக்கங்களை உருவாக்குதல், தினசரி மிராக்கிள் மார்னிங்பயிற்சிகளை ஒன்றாக செய்தல், ஒவ்வொருவருடனும் வாரத்திற்கு இரண்டு முறையாவது கலந்துரையாடல், ஆழ்மனப்பயிற்சிகளுடன் தினசரி நடவடிக்கைகளை ஒன்றுபடுத்துதல், மனோசக்தியை உத்வேகப்படுத்த புத்தகங்களை துணைக்கு அழைத்தல், ஜூம் அல்லது ஸ்கைப் அல்லது வேறு தளத்தில் எல்லோரும் நேரலையில் கலந்துரையாடுதல் என்று செயல்முறை சாலஞ்ச் (உங்களுடன் நானும் இணைந்து எனது வாழ்விற்கும்) நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன். ஏறக்குறைய நெப்போலியன் ஹில் சொன்ன ஒரு மாஸ்டர்மைண்ட்போல இது.

Mindset Transformation

மனதின் அளப்பற்கரிய சக்தியை உணர்ந்து அதனை நம் மேன்மைமிகு வாழ்க்கைக்கேற்ப மாற்றியமைத்தல்.

Habit
Formation

பழக்கங்களை நெறிப்படுத்துதல். அதிகாலை எழுந்திருப்பது முதல் இரவு உறங்கும் முன் செய்ய வேண்டியது வரை, உணவு முதல் உறக்கம் வரை நம் பழக்கங்களை நெறிப்படுத்துதல்

Goals
and Purpose

வாழ்வின் பாதையை சரியாக நிர்ணயித்து அதில் ஓடி வெற்றி பெற கற்றுக் கொள்ளுதல்

Subconscious Programming & Paradigm Shift

ஆழ்மனதின் கடந்த கால பதிவுகளை அகற்றி முழுமையாகவும் புதிய பரிமாண பதிவுகளை உள்ளீடு செய்தல்

Shift from
Ambition to Meaning

லட்சியங்களை நோக்கிய வாழ்க்கை பயணத்தை அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு திருப்பி விடுதல்.

Bouncing Back
Big

புறசூழ்நிலைகளால் மனம் உழன்று மன அழுத்தம், தளர்வு, ஊக்கமில்லாமை போன்றவற்றை புறந்தள்ளி மீண்டு எழுதல்.

இது நாம் இதுவரை பார்த்து வந்த பிரபஞ்ச விதிகள் போன்ற ஆன்மீக விஷயங்களையும், மனிதர்கள் வகுத்த சுயமுன்னேற்ற திட்டங்களையும் ஒன்றிணக்கும் முயற்சி. இரண்டிற்கும் ஒரு பாலம் இருந்தால் மட்டுமே இன்றைய சூழ்நிலையை கடக்க முடியும் என்று நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

எண்ணத்திற்கும் ஆக்கத்திற்கும் இடையே பாலமான செயலைஉணர்ந்து, வகுத்து, திட்டப்படுத்தி, வாழ்வில் முற்றிலும் பதிய வைக்கும் முயற்சி.

நிகழ்ச்சியின் வடிவமைப்பு

என்ன செய்யப் போகிறோம்?

  • அனைவரும் ஒரு மாஸ்டர்மைண்ட் குழுவாக இணையப் போகிறோம். 90 நாள் நடைமுறைகளை செயல்படுத்த உலகில் எங்கிருந்தாலும் தொழில்நுட்ப வழி ஒன்றிணையவிருக்கிறோம். இதற்கென்று ஒரு வாட்சாப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. உடன் நமது அகம்,அற்புதம் மெம்பெர்ஷிப் தளத்தில் பிரத்யேக பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

  • தினசரி பங்கேற்பாளர்களை காலை 5 மணிக்கு எழுப்புவதில் இருந்து, உடல் பயிற்சி, தியானம், மனப்பயிற்சி என்று தொடங்கி, ஆழ்மனக்காட்சிப் படைப்பு, அன்றைய நடவடிக்கைகளை சரி செய்வது வரை ஒன்றாக பங்கேற்பாளர்கள் அனைவரும் பயணிக்கப் போகிறோம். இது வெறும் செயல் குறிப்புகளாக மட்டுமே இருக்கப் போவதில்லை. ஒரு முழுமையான கோச்சிங் போன்றே இது அமைக்கப்படுகிறது.

  • முதல் நாளில் இருந்தே இந்த 90 நாட்களில் அடைய விரும்பும் இலக்கு, வாழ்வின் ஒரு பெரிய முக்கிய இலக்கு போன்றவை நிர்ணயிக்கப்பட்டு அவற்றை அடைய ஒருவருக்கு ஒருவர் உதவும் வண்ணம் செயல்படப் போகிறோம். இதில் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கும்.

  • தினசரி வாழ்வில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள், எதிர்மறைகள்(Negativity) போன்றவற்றை கடக்க வழிகள் காணவிருக்கிறோம்.

  • வாழ்வின் மிக முக்கியமான சிக்கலாக இனி வரும் கொஞ்ச காலத்திற்காவது பொருளாதார சிக்கல்கள் இருக்கப் போகின்றது. அதனை சமாளிக்க பிரபஞ்ச கோட்பாடுகளின் துணையை நாம் நாடவிருக்கிறோம்.

  • இப்போது இருக்கும் விஷயங்களை வைத்துக் கொண்டு மனச்சோர்வடையாமல் இந்த அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டு வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முயற்சி செய்யப் போகிறோம்.

  • நானும் அதில் ஜீரோவில் இருந்து தொடங்க போகிறேன். என்னிடத்தில் 2012ல் எதுவும் இல்லா நிலையில் நான் எப்படி இருந்தேனோ அப்படித் தொடங்கப் போகிறேன். இறைபேராற்றல் நம்முடன் எப்படி செயல்படுகிறது என்பதை எல்லோர் மனதில் நிறுவவே இந்த முயற்சி. பங்கேற்பாளர்களான நீங்களும் அதே போல அவரவர் நிலையில் இருந்து மீண்டும் தொடங்கலாம்.

  • தனிமனித மாற்றத்தின் சக்தியும், அது சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் வலியுறுத்தப்போகிறோம். பலரும் பேசிவரும் (அரசாங்கம் உள்பட) சுயசார்பு வாழ்க்கை முறையைக் குறித்தும் சமூகநோக்கு தொழில்முனைவு (visionary social entrepreneurship) குறித்தும் கலந்துரையாடி அவற்றை சரியான ரீதியில் செயல்படுத்தப் போகிறோம். இன்று இல்லாதோர் பலருக்கும் எவ்வித நோக்கமுமின்றி உதவியது இத்தகைய மனங்களே.

  • திட்டங்கள், செயல் வடிவமைப்புகள், செயலாக்கங்கள் அனைத்தும் ஒவ்வொரு பங்கேற்பாளராலும் தனித்தனியே அமைக்கப்படும். அதனை யதார்த்தத்தில் செயலாற்ற அனைவருக்கும் அனைவராலும் ஊக்குவிப்பும் உற்சாகமும் அளிக்கப்படும். எங்காவது தவறு ஏற்படும் வேளையில் அதனை கண்டறிந்து அதனை சரிசெய்ய (தனிப்பட்ட மற்றும் கூட்டு) ஆலோசனைகளும் வழங்கப்படும்.

  • தேவைப்படும் இடத்தில் நிபுணர்களின் ஆலோசனையும் கேட்டுப் பெறுவதற்கு முயற்சி செய்வோம்.

இங்கு யாரும் அதிகாரி அல்ல. இது ஒரு சராசரி முழு ஆன்மீக பயிற்சி அல்ல. “தினசரி வாழ்க்கையே உண்மையான ஆன்மீகம்”, என்ற கொள்கையில் நமது தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் முழு விழிப்புணர்வோடு இதற்காகத்தான் இதை செய்கிறோம் என்று ஈடுபடும் நேரத்தில் அதுவே முழு யோகம், “கர்மயோகம்” ஆகி விடுகிறது. அதைத்தான் நாம் செய்யப் போகிறோம்.

பங்கேற்பாளர்களான உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

  • 90 நாட்கள் இறுதியில் நீங்கள் ஒரு புதிய மனிதராக நிச்சயம் உருவெடுத்திருப்பீர்கள்.

  • உங்களுக்கான 90 நாட்கள் குறுகிய கால இலக்கு மற்றும் திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்தி வெற்றியும் கண்டிருப்பீர்கள்.

  • மகிழ்ச்சியை தரும், வாழ்வில் புதிய சக்தியோட்டத்தை உண்டு பண்ணும் நேர்மறை பழக்க வழக்கங்கள் உங்களிடம் உருவாகியிருக்கும். எதிர்மறைகளை புரிந்து கொண்டு வாழும் பக்குவமடைந்திருப்பீர்கள்.

  • உங்கள் ஆழ்மனத்தில் இருக்கும் பழைய பதிவுகளை நீக்கி புதிய பதிவுகளை உள்ளீடு செய்து அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பாதையில் வெற்றி நடை போடுவீர்கள்.

  • பிரபஞ்ச விதிகளை முழுவதுமாக உங்கள் வாழ்விற்குள் உணர்ந்து அனைத்து சூழ்நிலைகளிலும் அவற்றை பயன்படுத்த தொடங்கியிருப்பீர்கள்.

  • விதிவசம்” என்ற உங்கள் மனநிலையில் இருந்து “இணைந்து படைத்தல்” என்ற உன்னத மனநிலைக்கு மாறி உங்கள் யதார்த்தத்தை நீங்கள் படைக்கத் தொடங்கியிருப்பீர்கள்.

இந்த பயிற்சியானது மே 27 முதல் தொடங்கி ஆகஸ்ட் 24 வரை நடக்கவிருக்கிறது. இதில் தனிப்பட்ட முறையில் எனது வாழ்வில் நான் செயல்படுவதை முழுவதுமாக பதிவு செய்து அதனை யூட்யூபில் பதிவிட இருக்கிறேன். இது காண்போர்கள் அனைவரையும் ஈடுபட வைக்கும். அவர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். வாழ்வில் நான் எதிர்கொள்ளும் ஒருவேளை சிறிய சிறிய பின்னடைவுகளில் இருந்து மீண்டு வர ஆலோசனைகளும் நீங்கள் தர வாய்ப்புண்டு. அதனால் மேலும் படிப்பினை கூடும். “என்ன ஒரு சோதனை எலியாக”, நான் ஆக்கிக் கொள்ளும் முயற்சி. இதில் நான் அடையும் அந்த இலக்கு பலரையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

நமது இந்த பயிற்சியில் 50 பேரை நேரடியாக இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளேன். ஒரு வேளை இந்த 50 பேர் தனக்கான மாற்றத்தை கண்டு விட்டார்களேயானால், அது தானாக சமூகத்திற்கு விரியும். ஒவ்வொருவரும் இதே எண்ணத்தில் சமூகத்திற்கு உதவும் வகையில் வாழத்தொடங்கியிருப்பர். அவர்களுக்கு செல்வ வளத்தில் குறை இருக்காது. அதற்கான அடித்தளம் நாம் கண்டிப்பாக போட்டிருப்போம். நமது வித்தியாசங்களை மறந்து ஒருமித்த கருத்துக்களுடன் வாழ்வின் பல தளைகளிலிருந்து மீண்டெழுவோம்.

50 பேரையும் தாண்டி பொதுவெளியில் ஒரு சிறப்பு மோட்டிவேஷன்:

ஒரு சிலருக்கு மட்டும்தான் இது என்பது நம் எண்ணமல்ல. “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” இது தான் நமது நோக்கம். அதனாலேயே பின்வரும் நடவடிக்கைகள் இந்த நிகழ்ச்சி மூலம் எடுக்கப்படும்.

  • என் வகையில் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை (பிற பங்கேற்பாளருடையது அல்ல) நான் பதிவு செய்யப்போகிறேன். அதனை நமது யுட்யூப் சானலில் ஒரு வீடியோ லாகாக (vlog) பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன். இது நேரடி பங்கேற்பாளராக அல்லாதவருக்கு ஒரு மோட்டிவேஷனாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதே போல் ஆழ்மனத்தின் சக்தியையும், பிரபஞ்ச விதிகளையும் அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

  • இறுதியில் 90 நாட்களுக்கு பிறகு நடந்தேறியவையில் பலவற்றையும் சரியாக ஆவணப்படுத்தி அதனை ஒரு முழு வீடியோ பயிற்சியாகவும், சீக்ரெட் போன்ற ஒரு ஆவணப்படமாகவும் பிறருக்கு பயன்படும் வகையில் அமைக்கலாம் என்று நினைக்கிறேன்.

நிகழ்ச்சிக்கான பதிவு கட்டணம் - ரூ.3500/- மட்டுமே

உங்களுக்கான சிறப்பு போனஸ்கள்

  1. அகம், அற்புதம் சிறப்பு வாழ்நாள் மெம்பெர்ஷிப் (உண்மையில் வருடத்திற்கு ரூ.9000 கட்டணமாக இருந்தது. சூழ்நிலை கருதி அனைவரும் பயன்பெற மார்ச் மாதம் வாழ்நாள் சிறப்புக் கட்டணமாக ரூ.1500 என்று அறிவிக்கப்பட்டது).
  2. 90 நாட்களில் இலக்கை நிர்ணயிக்கவும் அதனை அடையவும் வேண்டிய அளவு ஏ.வி.ஆருடன் தொலைபேசி கன்சல்டேஷன். (சாதாரணமாக அரை மணிநேரத்திற்கு ரூ.500 முதல் 1000 வரை)

நம் பிற நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?

நம் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்கள் மூலமாக பலரும் வாழ்க்கையில் மாற்றம் கண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு சில பின்னூட்டங்களை உங்களுக்காக தந்திருக்கிறேன்.

இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. அடுத்த 90 நாட்கள் முழுமையாக இதில்தான் எனது கவனம் இருக்கப்போகிறது, நமது முன்னேற்றத்திற்காக. இந்த நிகழ்ச்சியில் நீங்கள் செய்வது உங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த முதலீடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

30 நாள் Moneyback Guarantee.

நம் இலக்கை நாம் நிச்சயம் அடைவோம். அதற்கு இறைபேராற்றல் நிச்சயம் வழிநடத்தும். ஆனாலும் உங்களுக்கு மேலும் இதில் சேர தயக்கம் இருந்தால் அதனை நான் உடைக்க இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு பைசாவிற்கும் நான் கியாரண்டி.

  • ஒரு வேளை வரும் 25ம் தேதிக்குள் 50 பேர் இதில் இணையவில்லை என்றால் உங்களுக்கு நீங்கள் கட்டிய கட்டணம் திரும்ப அளிக்கப்படும்.

  • ஒரு வேளை இந்த பயிற்சியில் கலந்து கொண்ட பிறகு இதில் உங்களுக்கு திருப்தியில்லை என்றாலும், நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் 30 நாட்களுக்குள் நிச்சயமாக எனக்கு ஒரு தகவல் அனுப்பினால் போதும் அந்த பணம் திரும்ப அளிக்கப்படும்.

ஒன்றாய் இணைவோம். மீண்டு(ம்) எழுவோம். விண்ணைத் தொடுவோம்!

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

என்றும் அபரிமித அன்புடன்,

.வி.ஆர்.

பின்குறிப்பு மற்றும் வேண்டுகோள் : இந்த 50 பேர் எனும் இலக்கை அடைய இந்நிகழ்வினை குறித்து உங்கள் நட்புக்களுடனும், உறவுகளுடனும் இதனை பகிருங்கள். அவர்களையும் பங்கு கொள்ள செய்யுங்கள்.

© 2020 – www.agamarputham.in – All Rights Reserved. Alpha at Omega Foundation for Human Excellence.

Disclaimer: This is not a Get Rich Quick Scheme or we don’t support or endorse any ponzy schemes including MLM. We don’t guarantee any range of income this programme. Individual Results may vary based on their efforts and execution of various actions taught throughout the programme.

The product/service is offered based on few terms and conditions. A buyer on purchase agrees to the simple term that only with full knowledge of the product/service only is ordering the product. In case after a purchase, access details are not sent to the e-mail id provided, buyers are suggested to contact us in
Whatsapp : +91-9894265400/+917339556148 or email us at alphaatomegafoundation@gmail.com.